Joint Commissioner Inspection of Ropecar Work at Sholingur Yoga Narasimha Temple
சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்மர் கோவிலில் நடை பெற்று வரும் ரோப்கார் பணி மற்றும் அடிப்படை வசதிக்கான கட்டுமான பணிகள் குறித்தும், மலையில் இருந்து மழைநீர் ரோப்கார் பகுதியில் செல்லாதவாறு மாற்றுப்பாதை அமைப்பது குறித்தும் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன், தொல்லியல் துறை அலுவலர் கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பெருங்காஞ்சியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதையும் ஆய்வு செய்தனர். மண்டல ஸ்தபதி மார்க்கபந்து, இளநிலை பொறியாளர் கிஷோர் உடனிருந்தனர்.