ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் கூடுத லாக 41 நகரங்களில் 5-ஜி சேவையை விரிவுப்படுத்தி உள்ளது. 
இதில், தமிழ்நாட்டில் காரைக்குடி,  கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, ஊட்டி, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 30 நகரங்களில் 5-ஜி சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இவை மட்டுமின்றி நாடு முழுவதும் 406 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5-ஜிசேவை தற்போது பயன்பாட்டில் உள்ளது.