குறள் : 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
மு.வ உரை :
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
கலைஞர் உரை :
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை
சாலமன் பாப்பையா உரை :
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
Kural 1065
Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu
Unnalin Oonginiya Thil
Explanation :
Even thin gruel is ambrosia to him who has obtained it by labor.
Horoscope Today: Astrological prediction for March 29, 2023
இன்றைய ராசிப்பலன் - 29.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-03-2023, பங்குனி 15, புதன்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.08 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 08.07 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். துர்காஷ்டமி. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 29.03.2023 | Today rasi palan - 29.03.2023
மேஷம்
இன்று பிள்ளைகள் பெருமை படும் படி நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
மிதுனம்
இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். மன நிம்மதி ஏற்படும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.