குறள் : 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
மு.வ உரை :
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
கலைஞர் உரை :
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்
சாலமன் பாப்பையா உரை :
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
Kural 1059
Eevaarkan Ennuntaam Thotram Irandhukol
Mevaar Ilaaak Katai
Explanation :
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and receive (them).
Horoscope Today: Astrological prediction for March 23, 2023
இன்றைய ராசிப்பலன் - 23.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
23-03-2023, பங்குனி 09, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.08 வரை பின்பு அமிர்தயோகம். சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 23.03.2023 | Today rasi palan - 23.03.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 02.08 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். எடுத்த காரியம் பாதியில் தடைப்படும். கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.08 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.
மகரம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.