குறள் : 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
மு.வ உரை :
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
கலைஞர் உரை :
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்
சாலமன் பாப்பையா உரை :
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
Kural 1049
Neruppinul Thunjalum Aakum Nirappinul
Yaadhondrum Kanpaatu Aridhu
Explanation :
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
Horoscope Today: Astrological prediction for March 13, 2023
இன்றைய ராசிப்பலன் - 13.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-03-2023, மாசி 29, திங்கட்கிழமை, சஷ்டி திதி இரவு 09.28 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் காலை 08.21 வரை பின்பு அனுஷம். மரணயோகம் காலை 08.21 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 13.03.2023 | Today rasi palan - 13.03.2023
மேஷம்
இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
துலாம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.
மீனம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001