குறள் : 1040

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.


மு.வ உரை :

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால் நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

கலைஞர் உரை :

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்

சாலமன் பாப்பையா உரை :

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.


Kural 1040

Ilamendru Asaii Iruppaaraik Kaanin

Nilamennum Nallaal Nakum

Explanation :

The maiden Earth will laugh at the sight of those who plead poverty and lead an idle life.


Horoscope Today: Astrological prediction for March 04, 2023


இன்றைய ராசிப்பலன் - 04.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

04-03-2023, மாசி 20, சனிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 06.41 வரை பின்பு மரணயோகம். சனிப்பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 

இன்றைய ராசிப்பலன் - 04.03.2023 | Today rasi palan - 04.03.2023

மேஷம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை பலப்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பெரிய மனிதர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001