குறள் : 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.


மு.வ உரை :

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

கலைஞர் உரை :

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்

சாலமன் பாப்பையா உரை :

நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.


Kural 1039

Sellaan Kizhavan Iruppin Nilampulandhu

Illaalin Ooti Vitum

Explanation :

If the owner does not (personally) attend to his cultivation his land will behave like an angry wife and yield him no pleasure.


Horoscope Today: Astrological prediction for March 03, 2023


இன்றைய ராசிப்பலன் - 03.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

03-03-2023, மாசி 19, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.11 வரை பின்பு வளர்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.43 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 03.43 வரை பின்பு மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 03.03.2023 | Today rasi palan - 03.03.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத இனிய நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினை குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 08.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு காலை 08.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001