ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பொது மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் பி.ஏகராஜ் ஆண்டு சொத்து வரி, கடை வாடகை மற்றும் குடிநீர் கட்டணம் குறித்து நேற்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் வியாபாரிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்ன வென்றால் இந்த நிதி ஆண்டு 2023-3-31 டன் முடிவடைவதால் தாங்கள் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி, கடை வாடகை போன்றவைகளை உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
மேலும் ராணிப்பேட்டை நகராட்சியில் இதுவரை சொத்து வரி ₹2.50 கோடியும், வீட்டு வரி கடை வாடகை சுமார் ₹2.45 கோடியும், குடிநீர் கட்டணம் ₹2 கோடியும் என பொது மக்களால் செலுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே ராணிப்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவைகளை உடனடியாக செலுத்தி ராணிப்பேட்டை நகராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உதவிடுமாறு பொது மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பொது மக்களின் நலன் கருதி வரும் மார்ச் 31-3-2023 வரை அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ராணிப்பேட்டை நகராட்சி வரி வசூல் மையம் இயங்கும், எனவே வரும் 31ம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.