திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தது. அப்போது ரெயிலில் சமோசா வியாபாரம் செய்யும் அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 53) என்பவர் ரெயில், பிளாட்பாரத்தில் நிற்பதற்கு முன் ஓடும் ரெயிலில் ஏறமுற்பட்டார். அப்போது அவர் தவறி விழுந்தார் இதில் சீனிவாசனின் வலது கைதுண்டானது.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு - முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.