ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள குகையநல்லூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் மகன் லோகேஷ் (21). இவர் நேற்று மாலை சொந்த வேலை விஷயமாக தனது பைக்கில் ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சிப்காட் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறிய பைக் முன்னால் சென்ற கார் மீது பலமாக மோதியது. இதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.