How to apply for Vellore district Aavin veterinary consultant Jobs details in Tamil
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகிறது ஆவின் பால் நிறுவனம். அதன் வேலூர் மாவட்ட நிறுவனத்தில் கால்நடை ஆலோசகராக பணிபுரிய 5 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு வருட ஒப்பந்த முறையில் இந்த பணிக்கு தற்போது ஆள் எடுக்கப்பட்டு வருகிறது.
காலிப்பணியிட விவரம் : கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 5 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பள விவரம் :
கால்நடை ஆலோசகர் பணிக்கு அனைத்து விதமான அலவன்சுகளையும் உள்ளடக்கி 43,000 ரூபாய் சம்பளம் தரப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிகள் :
B. V. Sc & AH கணினி அறிவு இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
குறிப்பு : இருசக்கர வாகனம் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் இருக்க வேண்டும்.
நேர்காணல் :
தகுதியான நபர்கள் தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட ஆவின் அலுவலகத்திற்கு 24.3.2023 அன்று காலை 11 மணிக்கு செல்ல வேண்டும்.
வேலூர் மாவட்ட ஆவின் அலுவலக முகவரி :
அட்மினிஸ்ட்ரேட்டிவ் அலுவலகம்,
வேலூர் DCMPU லிமிட்டெட்..
சத்துவாச்சாரி,
வேலூர் - 9.
மேலதிக தகவல்களை பெற மேலாளரை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் : 9345161677
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க கிளிக் செய்யவும்.