ராணிப்பேட்டையில் நேற்று லோடு வேன் கவிழ்ந்த விபத்தில் 8 வட மாநில இளைஞர்கள் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிரிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே நவல்பூர் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினாய் மகன் ஆபிஸ்(21), ஜாலு நாயக(26), புல்லா முக்தார்(26), மோகன்கார் மயன் காலியா நாயக்(21), ஜார்கண்ட் மாநிலம் போஷியான் மகன் ரமேஷ் குமார்(20), நவீன்(24), பிரதீப்(27) மற்றும் இவர்களுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த சக்தி முருகன்(24), லோடுவேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 8 பேரும் நெற்று மாலை சிப்காட் வார் சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு லோடு வேனில் ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சிப்காட் தனியார் ஓட்டல் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த ஒரு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.
இதனால் லோடு வாகனத்தை இயக்கிய சக்தி முருகன் பிரோக் போட்டுள்ளார். இதில், நிலைதடுமாறிய லோடு வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சபேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்மடைந்த 8 பேரை மீட்டு வாலாஜா அரசு மருந்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் அங்கு அவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.