ராணிப்பேட்டை அருகே 5 சவரன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி தமிழ் அன்னை வீதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு (49). இவரது மனைவி ரேவதி ஆகிய இருவரும் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் தங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகளை மர்ம திருட்டு ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.