குறிப்பாக வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றும் போதெல்லாம், அம்மா செம்பு சொம்பில் நீர் பிடித்து வைப்பார். எதற்காக இப்படி நீரை நிரப்பி வைக்கிறார்கள் என சில பெரியவர்களை கேட்டறிந்த போது கிடைத்த சுவாரஸ்யமான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும்.
இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி ,அதில் தாங்கள் வழிபடும் தெய்வம் புண்ணியங்களை சேர்க்கவேண்டும் என வேண்டி பூஜை முடிந்ததும் அதை பருகுகின்றனர், வீடுகளில் தெளிக்கின்றனர்.
"ப்ர" என்றால் சமஸ்கிருத மொழியில் கடவுள். நாம் படைக்கும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது, மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை .