Why do we use iron products when epilepsy attacks?
மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும்.
பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிக்கும்.
பொதுவாக வலிப்பு நோயின் காரணம் மூலையிலுள்ள நியூரான்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதினால் ஏற்ப்படுகின்றது.
வலிப்பு நோய் ஏற்ப்படும் பொழுது நமது உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் கடத்தப்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் நபர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விடுகிறார்.
வலிப்பனது இயல்பான ஒன்று எனவும், சிறிது நேரத்தில் பாதிக்கப்படும் நபர் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார் என்றும் ஆங்கில மருத்துவம் கூறுகிறது .
நமது பாரம்பரிய மருத்துவத்தில், வலிப்பு வந்த நபருக்கு கையில் இரும்புக்கம்பி தருவதனால் உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதாக நம்பப்படுகிறது.