ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 21 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று எஸ்பி கிரண் ஸ்ருதி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
In the weekly grievance redressal camp held at Ranipet SP office, 21 people petitioned and SP ordered to take appropriate action
ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பொது பிரச்னைகள், தனிநபர் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந் நிலையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் வாராந்திர குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், இடப்பிரச்னை, குடும்ப தகராறு, பணம் கொடுக்கல், வாங்கல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 21 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலமாக உரிய விசாரணைகள் மேற்கொண்டு தீர்வு காணப்படும்' என்று எஸ்பி கிரண் ஸ்ருதி தெரி வித்தார்.
இதன் ஒருபகுதியாக அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த மூதாட்டி ஜானகி(84) என்பவர் வீடு பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்தார். இதனிடையே வயது முதிர்வு காரணமாக அவரால் மாடிப்படி ஏறிச்செல்ல முடியவில்லை. இதனையறிந்த எஸ்பி கீழே இறங்கி வந்து மூதாட்டி ஜானகியின் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார்.
இதில், ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.