"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி".

Vittil murunkai valarppavarkal verunkaiyotu povarkal enpatu unmaiya?

முருங்கை மரத்தை எல்லோரது வீட்டிலும் விரும்பி வளர்க்கும் மரமாக இருந்து வருகிறது. 

முருங்கை மரம் இல்லாத வீடுகள் குறைவு தான் என்று சொல்லும் அளவிற்கு, அனைவரது வீட்டிலும் முருங்கை மரம் நிச்சயம் இருக்கும்.

ஆம் வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையே.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய் ,பூ , இழை அனைத்துமே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டவை .

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அடிக்கடி முருங்கையை உண்டுவர, என்றும் நீங்காத இளமையுடன் "வயதான பின்பும் கோல் (கைத்தடியின்) துணையில்லாமல் வெறும்கையோடு நடந்து செல்லலாம்" என்பதே இந்த பழமொழி.

ஆனால் பழமொழியை சரியாக புரிந்து கொள்ளாத சிலர் தவறாக புரிந்து கொண்டு தவறான அர்த்தம் பரப்பி விட்டார்கள். 

அவ்வளவு தானே தவிர இந்த பழமொழிக்கும் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

தாராளமாக எல்லோரது வீட்டிலும் முருங்கை மரத்தை வளர்த்து வரலாம்.