ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக வளர்மதி ஐஏஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை ஆட்சியராக வளர்மதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வளர்மதி ஐஏஎஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாஸ்கர பாண்டியன் வளர்மதி ஐஏஎஸ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேர்த்தார்.