ராணிப்பேட்டைமாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதேபோல் ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு அருகே வரும் போது லாரியும், பஸ்சும் மோதி கொண்டது.
இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி, லாரியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.மேலும் பஸ்சில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.