👉 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கவிஞர் விக்டர் ஹ்யுகோ பிரான்ஸில் பிறந்தார்.

பிறந்த நாள் :-

லெவி ஸ்ட்ராஸ்


👖 உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார்.

👖 கலிபோர்னியாவில் 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தார்.

👖 கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும், தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார்.

👖 டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

👖 அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ள10 ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது.

👖 தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று, வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73வது வயதில் (1902) மறைந்தார்.

தாராபாரதி


✍ தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை' என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

✍ 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு அரசு 2010-2011ஆம் ஆண்டில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

✍ புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆகியவை இவரது படைப்புகளாகும். கவிஞாயிறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவர் தன்னுடைய 53வது வயதில் (2000) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.


1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.


1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.


1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.


1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.


1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]


1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.


1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.


1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2]


1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.


1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.


1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.


1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.


1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.


1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.


1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.


1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.


1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.


1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.


1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.


2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.


2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,


இன்றைய தின பிறப்புகள்


1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593)


1780 – கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (இ. 1856)


1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)


1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925)


1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939)


1866 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1930)


1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982)


1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)


1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014)


1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000)


1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2019)


1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர்


1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை


1983 – பேபே, பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரர்


1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்


இன்றைய தின இறப்புகள்


1878 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818)


1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)


1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1847)


1933 – சிவகங்கை இராமச்சந்திரன், தமிழக செயற்பாட்டாளர் (பி. 1884)


1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)


1969 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1883)


1998 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1902)


2004 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (பி. 1920)


2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941)


2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)


2015 – அவிஜித் ராய், அமெரிக்க-வங்கதேச செயற்பாட்டாளர். பொறியியலாளர் (பி. 1972)


2017 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்துப் பாடகர், நாடகக் கலைஞர்


இன்றைய தின சிறப்பு நாள்


விடுதலை நாள் (குவைத்)