ஆற்காடு அருகே காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த காதலனின் திருமணத்தை இளம் பெண் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The young woman who stopped the marriage of the lover who cheated on her, caused a stir near Arcot

காதல்


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், அதேகிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இளம்பெணணை அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு தெரியாமல், வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அம்முண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அவர்கள் திருமணம் நேற்று ஆற்காடு அடுத்த விளாரிகூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடை பெற இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

திருமணம் நிறுத்தம்


அதன் பேரில் போலீசார் சென்று மணமகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.