ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 30). இவர் கஸ்பா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கடைக்கு வந்த நபர்கள் ஷாஜகானிடம் தகராறில் ஈடுபட்டு கற்களால் கடையை சேதப்படுத்தி உள்ளனர்.
இதில் கடையில் வேலை செய்த இமாம் என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஷாஜகான் ஆற்காடு டவுன் போலீ சில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட ஆற்காடு மேனேஜர் தெருவை சேர்ந்த ரபி (21) என்பவரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.