Tea master dies after being hit by paddy harvester near Walaja


வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(41). இவர் அதே கிராமத்தில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று வாலாஜாவிலிருந்து தனது பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அனந்தலை திருமலை நகர் அருகே சென்ற போது எதிரே வந்த நெல் அறுவடை இயந்திரம் ஈஸ்வரன் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரன் படுகாயமடைந்தார். மேலும், படுகாயமடைந்த ஈஸ்வரனை 'அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.