ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் போடப்பாறை அருகே அரக்கோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறிய குட்லெட் எனும் அரசுநிதி உதவி பெறும் பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவன் பாலசுதாகர் படியில் தொங்கியதை ஓட்டுநர் பாலாஜி தட்டிக்கேட்டுள்ளார். 

அப்போது ஆத்திரமடைந்த மாணவன் ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், வைரலாக பகிரப்பட்டு வருகிறது.