ராணிப்பேட்டையில் நகராட்சி கவுன்சிலரை கத்தியால் தாக்கி 10 பவுன் செயினை பறித்த வாலி பரை போலீசார் கைது செய்தனர்.

Ranipettai municipal councilor attacked with a knife and snatched 10 pounds chain arrested

நகராட்சி கவுன்சிலர்


ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 36). விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இவர் ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று காரை கூட்ரோடு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரை பகுதியை சேர்ந்த சுபாகர் (32) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி நரேஷ்குமார் மோட்டார் சைக்கிளை வழி மறித்தார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

10 பவுள் செயின் பறிப்பு


அவரது கழுத்தில் சுபாகர் கத்தியை வைத்து, நான் கேட்ட ரூ.50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால், நீ தொழில் செய்ய முடியாது என கூறி கன்னத்தில் அடித்துள்ளார். இதில் நரேஷ் குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

மேலும், சுபாகர் கத்தியின் பின்பக்கத்தால் நரேஷ் குமாரை தாக்கி, அவர் சட்டைபாக்கெட்டில் இருந்த ரூ.9800, கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து நரேஷ்குமார் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணா மலை வழக்குப் பதிவு செய்து, சுபாகரை கைது செய்து விசாரித்து வருகிறார்.