தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2022-23-ம் ஆண்டின் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகள் 12 வயது முதல் 19 வயது வரை பள்ளி பிரிவாகவும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி பிரிவாகவும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்ட்டிகள் நடைபெற உள்ளது.

www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யாத எவரும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வங்கிக் கணக்கில் வழங்கப்பட உள்ளது. மேலும் பதிவு பெறப்பட்ட பின்னர் 8 தனிநபர் மற்றும் 8 அணி குழுப்போட்டிகளுக்கு குறைவாக இருப்பின் அப்போட்டியினை மண்டல அளவில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்து உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.