ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் 21-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டை, சிப்காட், ஒழுகூர் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 
Power outage in Ranipet and Walaja areas on 21st February

இதனால் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 

ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், வேலம், அண்ணா நகர், எடப்பாளையம், முத்துக்கடை, ஆட்டோ நகர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வீ.சி.மோட்டூர், வன்னிமேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்ன சமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம் பாக்கம், அனந்தலை, வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.