பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
இவருக்கு வயது 72. 1974ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயக்கும் உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் மனதை உருக்குபவை.
இவர் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.
மூன்று முறை தேசிய விருது பெற்ற இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.