குறள் : 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
மு.வ உரை :
உழவருடைய கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால் விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
கலைஞர் உரை :
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
Kural 1036
Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai
Explanation :
If the farmers hands are slackened even the ascetic state will fail.
Horoscope Today: Astrological prediction for February 28, 2023
இன்றைய ராசிப்பலன் - 28.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-02-2023, மாசி 16, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 07.19 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 28.02.2023 | Today rasi palan - 28.02.2023
மேஷம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மன அமைதி இருக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும்.
மீனம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001