குறள் : 1035

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.


மு.வ உரை :

கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர் பிறரிடம் சென்று இரக்கமாட்டார் தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

கலைஞர் உரை :

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

சாலமன் பாப்பையா உரை :

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.


Kural 1035

Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu

Kaiseydhoon Maalai Yavar

Explanation :

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.


Horoscope Today: Astrological prediction for February 26, 2023


இன்றைய ராசிப்பலன் - 26.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

26-02-2023, மாசி 14, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.18 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 26.02.2023 | Today rasi palan - 26.02.2023

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிகாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மிதுனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். 

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொருளாதார பிரச்சினைகள் மதியத்திற்கு பின் சற்று குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வகையில் சிறு சிறு மனகவலைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001