குறள் : 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
மு.வ உரை :
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர் மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
கலைஞர் உரை :
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது
சாலமன் பாப்பையா உரை :
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
Kural 1033
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar
Explanation :
They alone live who live by agriculture; all others lead a cringing dependent life.
Horoscope Today: Astrological prediction for February 24, 2023
இன்றைய ராசிப்பலன் - 24.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-02-2023, மாசி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 24.02.2023 | Today rasi palan - 24.02.2023
மேஷம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் குறையும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
கடகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.
மகரம்
இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.