குறள் : 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.


மு.வ உரை :

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால் உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

கலைஞர் உரை :

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

சாலமன் பாப்பையா உரை :

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.


Kural 1032

Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu

Ezhuvaarai Ellaam Poruththu

Explanation :

Agriculturists are (as it were) the linchpin of the world for they support all other workers who cannot till the soil.


Horoscope Today: Astrological prediction for February 23, 2023


இன்றைய ராசிப்பலன் - 23.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

23-02-2023, மாசி 11, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 03.44 வரை பின்பு அமிர்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.


இன்றைய ராசிப்பலன் - 23.02.2023 | Today rasi palan - 23.02.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

கன்னி

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001