குறள் : 1028

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.


மு.வ உரை :

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்

கலைஞர் உரை :

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்

சாலமன் பாப்பையா உரை :

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.


Kural 1028

Kutiseyvaark Killai Paruvam Matiseydhu

Maanang Karudhak Ketum

Explanation :

As a family sufers by (ones) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.


Horoscope Today: Astrological prediction for February 19, 2023


இன்றைய ராசிப்பலன் - 19.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


19-02-2023, மாசி 07, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.19 வரை பின்பு அமாவாசை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.44 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 02.44 வரை பின்பு மரணயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். போதாயன அமாவாசை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 19.02.2023 | Today rasi palan - 19.02.2023

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். 

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

கன்னி

இன்று உங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

மகரம்

இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை முடியாத காரியங்கள் இன்று எளிதில் முடியும்.

கும்பம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001