குறள் : 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
மு.வ உரை :
உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
கலைஞர் உரை :
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்
சாலமன் பாப்பையா உரை :
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
Kural 1012
Oonutai Echcham Uyirkkellaam Veralla
Naanutaimai Maandhar Sirappu
Explanation :
Food clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
Horoscope Today: Astrological prediction for February 03, 2023
இன்றைய ராசிப்பலன் - 03.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-02-2023, தை 20, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி மாலை 06.58 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 03.02.2023 | Today rasi palan - 03.02.2023
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
துலாம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.
விருச்சிகம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்து லாபத்தை அடைய முடியும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கைக்கு கிடைக்காமல் போகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.