குறள் : 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
மு.வ உரை :
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும் பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
கலைஞர் உரை :
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
சாலமன் பாப்பையா உரை :
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
Kural 1011
Karumaththaal Naanudhal Naanun Thirunudhal
Nallavar Naanup Pira
Explanation :
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
Horoscope Today: Astrological prediction for February 02, 2023
இன்றைய ராசிப்பலன் - 02.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
02-02-2023, தை 19, வியாழக்கிழமை, துவாதசி திதி மாலை 04.26 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 06.18 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் காலை 06.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 02.02.2023 | Today rasi palan - 02.02.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பணப் பிரச்சினை நீங்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு வேலைபளு அதிகரிக்க கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
கும்பம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.