Famous film director and actor DP Gajendran passed away


உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன்!

அதுமட்டுமின்றி ஏராளமான தமிழ் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் கஜேந்திரன். 

நடிகர் கஜேந்திரனின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.