சோளிங்கர் தனியார் கம்பெனி ஊழியர் மயங்கி விழுந்து திடீரென இறந்தார். சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
An employee of Sholingur Private Company fainted and died suddenly

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி உட்பட்ட புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோபால் (57). இவர் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றார். பணியில் ஈடுபட்டிருந்த கோபால் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த கம்பெனி நிர்வாகத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே தன் கணவர் செய்த வேலை தன் மகனுக்கு வழங்க வேண்டும் என கூறி கோபாலின் தாய் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடதத்தினர்.

இதில் தனியார் கம்பெனி நிர்வாகத்தினர் கோபாலின் மகனுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்க்காக சடலத்தை கொண்டு சென்றனர்.