Crowd of devotees on the occasion of Thaipusa festival in Tiruthani


திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தையும், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளி இருப்பதையும் காணலாம்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை உள்பட தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவருக்கு பால், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து திரு ஆபரணங்களை அனுபவிக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி சுற்றி உள்ள திருவள்ளூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி ,ஆந்திரா சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி சுமந்து நடைபாதையாக கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு கட்டண தரிசன கட்டண பாதையிலும் சென்று தரிசனம் செய்து சென்றனர். பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் திருத்தணியில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் கோவில் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பல பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது.