ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் நேற்று 2 பைக்குகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாதிக்பாஷா நகரை சேர்ந்த ரஹமத்துல்லா என்பவர் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி சேமித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரது கடைக்கு அருகில் பழைய பொருட்களுடன், பழைய பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளது. இதைக்கண்ட கடையில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அங்கு இருந்த 2 பழைய பைக்குகள் எரிந்து சேதமானது. அப்போது அங்கு கரும்புகை உருவானதால் அங்கிருந்த வர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் றிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தேசிய நெடுஞ் சாலை ஓரம் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.