'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அப் படத்திலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்றும், ஆக்சன் கதையாக உருவாகவுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி யாகும் என கூறப்படும் நிலையில், தற்போது இப்படத்தின் பூஜை சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில சமூக வலைத்தளங்களில், 'மகிழ் திருமேனி படத்துக்கு பிறகு அஜித், முழுமையாக இரண்டு வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி வெளிநாடு ஒன்றில் தற்காலிக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இரண்டு வருட இடை வெளியை நிரப்புகிற அளவுக்கு, 'ஏ.கே.62' படம் இருக்க வேண்டுமென அஜித் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.