அமைச்சர் ஆர்.காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசிய 'வாலி பர்களை காவேரிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆர். காந்தி உள்ளார். கடந்த 21ம் தேதி காலை 10.57 மணியளவில் அமைச்சர் ஆர்.காந்தி சென்னையில் இருந்து காவேரிப்பாக்கம் வந்து கொண்டு இருந்தார். அப்போது அமைச்சரின் செல்போன் எண்ணிற்கு ஒரு மிஸ்டுகால் வந்தது.

தொடர்ந்து அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'தான் வழக்கறிஞர் வில்சன் பேசுவதாகவும், என்னிடம் ராணிப்பேட்டை சாமுவேல் பணம் வாங்கி விட்டான். உன்னிடம் கேட்டால் எல்லா தகவலும் கிடைக்கும்' என்று ஒருமையில் கனத்த குரலுடன் பேசி உள்ளார்.

அதற்கு அமைச்சர் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று ' கேட்டுள்ளார். மீண்டும் அந்த நபர் நான் கேட்கிற தகவல் மட்டும் சொல்லு என்று ஒருமையில் பேசியுள்ளார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போனில் அமைச்சரை ஒருமையில் பேசியவர்கள் சென்னை கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (31), சென்னை திருவெற்றியூர் சாத்தாங்காடு பகுதியச் சேர்ந்த கோகுல்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.