Youth arrested for stabbing Tasmac employee for asking for alcohol for free
குடிமகன்கள் அலறி ஓட்டம்
வேலூரில் ஓசியில் மது பாட்டில் கேட்டு கொடுக்காததால் டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டியை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மணி (22). இவர் நேற்று முன்தினம் மாலை காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று ஓசியில் மதுபாட்டில் கேட்டாராம். அதற்கு அங்கிருந்த விற்பனையாளர் ராஜேஷ், பணம் கொடுக்காமல் மது வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஏற்கனவே போதையில் இருந்த மணி, தன்னிடம் இருந்த கத்தியால் ராஜேஷை வெட்டியுள்ளார். இதில் அவரது முழங்கையில் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து கடை அருகில் நின்றிருந்த குடிமகன்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது தொடர்பாக ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக் குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.