நாளை 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி பண்டிகை கொண்டா டப்படுகிறது.
அனைத்து வைணவ கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடக்கிறது குறிப்பாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இவர்களுக்காக வேலூர் மற்றும் சென்னையில் இருந்து ஆந்திர அரசு சாலை போக்குவரத்துக்கழகம் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
அதே போல், வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில், ராணிப்பேட்டை மாவட் டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள், அத்தி ரங்கநாதர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இதற்காக தமிழ்நாடு அரசு போக் குவரத்துக்கழகம் வேலூர், குடியாத்தம் பகுதிகளில் இருந்து தலா 5 பஸ்கள் வீதம் பள்ளிகொண்டாவுக்கு இயக்குகிறது.
மேலும் திருப்பாற்கடலுக்கு ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கரில் இருந்து மொத்தம் 10 அரசு பஸ்களை இயக்குகிறது.