👉 1881ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை ஆரம்பித்தனர்.
👉 1924ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமொனிக்ஸ் என்ற இடத்தில் ஆரம்பமானது.
👉 1971ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
தேசிய வாக்காளர் தினம்
🌸 இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🌸 தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய சுற்றுலா தினம்
🌹 இந்திய சுற்றுலா தினம் ஜனவரி 25ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
🌹 இத்தினத்தில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு, கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் மாசு அடையாமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
🌹 சுற்றுலா என்பது பல்வேறு கலாச்சாரம், மதப் பழக்கங்கள் சார்ந்தவர்களை ஒன்று சேர்ப்பதோடு, அனைவரிடத்திலும் புரிதலை ஏற்படுத்துகிறது.
பிறந்த நாள் :-
பித்துக்குளி முருகதாஸ்
🌟 பக்தி பாடல்கள் பாடுவதில் தனக்கென்று தனி முத்திரையை பதித்த பித்துக்குளி முருகதாஸ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கோவையில் பிறந்தார். இயற்பெயர் பாலசுப்பிரமணியன்.
🌟 பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், இவருக்கு உபதேசம் அளித்து, முருகதாஸ் என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பிரம்மானந்த பரதேசியார் தனக்கு வைத்த பித்துக்குளி என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.
🌟 1947ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.
🌟 கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த பாடகரும், முருக பக்தருமான இவர் 95வது வயதில் (2015) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.
750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர்.
1348 – இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.
1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.
1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.
1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.
1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.[1]
1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.
1947 – தோமசு கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, “எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்” கண்டுபிடித்தார்.
1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.
1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
1955 – சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற அதியுயர் விருது வழங்கப்பட்டது.
1981 – மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
1993 – வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.
1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1998 – கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
2004 – ஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.
2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 – முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.
2013 – வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1627 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691)
1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1813)
1759 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1796)
1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1857)
1824 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1873)
1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (இ. 1941)
1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)
1920 – பால்ராஜ் மாதோக், இந்திய அரசியல்வாதி
1927 – டாம் ஜோபிம், பிரேசில் பாட்ரகர், இசைக்கலைஞர் (இ. 1994)
1928 – எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2014)
1933 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நடிகர் (இ. 1995)
1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (இ. 2009)
1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (இ. 2012)
1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், இசைக்கலைஞர், நடிகர் (இ. 1980)
1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)
1957 – ஜெனிபர் லீவிஸ், அமெரிக்க நடிகை
1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
1967 – ஊர்வசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் கால்பந்து வீரர்
1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை
இன்றைய தின இறப்புகள்
390 – நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329)
844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795)
1895 – தி. முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி (பி. 1832)
1918 – வில்லியம் வெட்டர்பர்ன், பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி, அரசியல்வாதி (பி. 1938)
1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)
1951 – அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே, இலங்கை அரசியல்வாதி, அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகர் (பி. 1988)
1960 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (பி. 1875)
1964 – கீழப்பளுவூர் சின்னச்சாமி, இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர், போராளி (பி. 1915)
1983 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய அரசியல்வாதி (பி. 1905)
1988 – திருவாசக சுவாமிகள், ஈழத்து சைவத் துறவி, சொற்பொழிவாளர் (பி. 1904)
2001 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (பி. 1921)
2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர், படிகப் பேராலயத்தை வடிவமைத்தவர் (பி. 1906)
2009 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (பி. 1932)
2014 – எம். உதயகுமார், இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1938)
2016 – கல்பனா, மலையாள நடிகை (பி. 1965)
2019 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர் (பி. 1925)
2021 – சி. ஆர். பார்த்திபன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1929)
இன்றைய தின சிறப்பு நாள்
தேசிய ஊட்டச்சத்து நாள் (இந்தோனேசியா)
தேசிய வாக்காளர் நாள் (இந்தியா)