🌷 1901ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை மறைந்தார்.

🌷 1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.

🌷 1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.

🌷 1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

நினைவு நாள் :-

🌷 1992ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி கோபால் (COBOL) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார்.


பிறந்த நாள் :-

சத்தியேந்திர நாத் போஸ்


🌟 இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

🌟 இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

🌟 இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய 80வது வயதில் (1974) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்

👉கிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.


👉கிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது.


👉1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார்.


👉1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.


👉1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார்.


👉1515 – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான்.


👉1600 – இசுக்கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.


👉1651 – இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.


👉1700 – உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.


👉1707 – போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.


👉1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.


👉1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.


👉1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அரச கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.


👉1788 – தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.


👉1800 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.


👉1801 – சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


👉1801 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.


👉1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.


👉1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.


👉1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.


👉1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.


👉1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.


👉1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.


👉1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


👉1872 – முதலாவது இந்திய அஞ்சல் ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.[1]


👉1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா தில்லியில் அறிவிக்கப்பட்டார்.


👉1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.


👉1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.


👉1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.


👉1893 – யப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.


👉1899 – கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.


👉1901 – நைஜீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.


👉1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.


👉1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


👉1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.


👉1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.


👉1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்..


👉1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.


👉1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் சனவரி 1, 1927 ஆக மாற்றப்பட்டது.


👉1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.


👉1935 – இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.


👉1945 – இரண்டாம் உலகப் போர்: மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.


👉1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை வடக்கு ஐரோப்பாவில் நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.


👉1947 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.


👉1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.


👉1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.


👉1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.


👉1956 – எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது.


👉1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ශ්‍රී (ஸ்ரீ) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.


👉1958 – இலங்கையில் பேருந்து சேவை தேசியமயமாக்கப்பட்டது.


👉1958 – ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.


👉1959 – கியூபப் புரட்சி: கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா பிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


👉1960 – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் கமரூன் இருந்து விடுதலை பெற்றது.


👉1962 – சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.


👉1964 – ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சாம்பியா, மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.


👉1971 – அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.


👉1973 – டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.


👉1978 – துபாய் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 190 பயணிகள் உட்பட அனத்து 213 பேரும் உயிரிழந்தனர்.


👉1979 – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.


👉1981 – கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.


👉1981 – பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.


👉1983 – அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.


👉1984 – புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


👉1985 – பிரித்தானியாவில் முதன் முதலில் செல்பேசித் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.


👉1989 – ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.


👉1993 – செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.


👉1995 – ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.


👉1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.


👉1999 – 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது.


👉2007 – பல்காரியா, உருமேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.


👉2007 – இந்தோனேசியாவின் மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.


👉2008 – கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


👉2009 – தாய்லாந்து, பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.


👉2010 – பாக்கித்தானில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.


👉2011 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.


👉2011 – எசுத்தோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.


👉2013 – கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.


👉2015 – உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..


👉2017 – துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்


👉1484 – உல்ரிச் ஸ்விங்ளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. 1531)


👉1548 – கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், கவிஞர் (இ. 1600)


👉1697 – யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநர் (இ. 1763)


👉1852 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1904)


👉1863 – பியர் தெ குபர்த்தென், பிரான்சிய வரலாற்றாளர், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை அமைத்தவர் (இ. 1937)


👉1867 – மேரி அக்வர்த் எவர்ழ்செடுபாங்கிலேய வானியலாளர் (இ. 1949)


👉1879 – இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய எக்ழுத்தாளர் (இ. 1970)


👉1890 – ரி. பி. ஜாயா, இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1960)


👉1891 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 3வது ஆளுநர் (இ. 1969)


👉1892 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1942)


👉1894 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1974)


👉1914 – நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)


👉1919 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)


👉1925 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)


👉1925 – மௌலானா வஹிதூதீன் கான், இந்திய செயற்பாட்டாளர்


👉1932 – அலவி மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2016)


👉1935 – ஷகிலா, இந்தித் திரைப்பட நடிகை (இ. 2017)


👉1935 – ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசியல்வாதி


👉1940 – பண்ணாமத்துக் கவிராயர், இலங்கை எழுத்தாளர்


👉1942 – அலசான் வட்டாரா, ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்


👉1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்


👉1944 – உமர் அல்-பஷீர், சூடானின் 7வது அரசுத்தலைவர்


👉1944 – கல்வயல் வே. குமாரசாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (இ. 2016)


👉1951 – நானா படேகர், இந்திய நடிகர்


👉1951 – மார்த்தா பி. கேனசு, அமெரிக்க வானியலாளர்


👉1952 – சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் ஆட்சியாளர்


👉1952 – ஷாஜி என். கருண், இந்திய இயக்குநர், ஒளிப்பதிவாளர்


👉1956 – கிறிஸ்டைன் லகார்டே, பிரான்சிய அரசியல்வாதி


👉1957 – நஜீப் அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி


👉1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)


👉1971 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ. 2016)


👉1971 – ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, இந்திய அரசியல்வாதி


👉1975 – சோனாலி பேந்திரே, இந்திய நடிகை


👉1977 – தாமிரா, தமிழகத் திரைப்பட இயக்குநர் (இ. 2021)


👉1979 – வித்யா பாலன், இந்திய நடிகை


👉1979 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2007)


இன்றைய தின இறப்புகள்


👉1894 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)


👉1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், பதிப்பாளர் (பி. 1832)


👉1910 – வே. அகிலேசபிள்ளை, தமிழறிஞர், ஈழத்துப் புலவர் (பி. 1853)


👉1944 – எட்வின் லூட்டியன்சு, ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவர் (பி. 1869)


👉1945 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (பி. 1874)


👉1955 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (பி. 1894)


👉1992 – கிரேசு ஹாப்பர், கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கர் (பி. 1906)


👉2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)


👉2010 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1957)


👉2016 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (பி. 1930)


இன்றைய தின சிறப்பு நாள்


👉இயேசுவின் விருத்தசேதன விழா


👉புத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)


👉சப்பானியப் புத்தாண்டு


👉உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)


👉குவான்சா கடைசி நாள் (ஐக்கிய அமெரிக்கா)


📌விடுதலை நாள்:


👉எயிட்டி (1804)


👉சூடான் (1956)


👉கமரூன் (1960)


👉புரூணை (1984)


👉செக் குடியரசு (1993)


👉சிலோவாக்கியா (1993)