ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து 221 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே14லட்சத்து 30ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
21 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.