வாலாஜாப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பஞ்சாயத்து தலைவரும், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகனை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.100 நாள் வேலை வாய்ப்பு, ஏரியில் மீன் பிடிக்க பயன்படுத்துவது, கோவில் நிர்வாகத்தில் தலையிட முயல்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து லாலாப்பேட்டை ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை அருகே மலைக்கோவிலுக்கு செல்லும் கிராம பொது மக்களை தொடர்ந்து மிரட்டி வரும் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம பொதுமக்கள் கடைகளை அடைத்துவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை ஊராட்சி பகுதியில் அருள்மிகு கஞ்சனகிரிமலை கோவில் அமைந்துள்ளது. இந்த காஞ்சனாகிரி மலைகோவில் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் காஞ்சனாகிரி மலை கோவில் அமைந்துள்ள பகுதி என்பது எனது முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி எனவும், இதனால் லாலாபேட்டை ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் அருகே இருக்கும் காஞ்சனகிரிமலை கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என பொதுமக்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு, ஏரியில் மீன் பிடிக்க பயன்படுத்துவது, கோவிலுக்கு நிர்வாகத்தில் தலையிட முயல்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த லாலாபேட்டை ஊராட்சி சேர்ந்த அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அப்பகுதி முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மூ,டி போராட்டத்தில் ஈடுபட்டத்துடன், மேலும் பேருந்து நிலையம் அருகே முன்பு ஒன்று திரண்டு மலை கோவிலுக்கு செல்வதற்கு தடை தெரிவித்து பொதுமக்களை மிரட்டி வரும் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காஞ்சனகிரி மலை கோவிலுக்கு கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக எவ்வித தடையும் இன்றி சென்று வருவது போல், தொடர்ந்து எவ்வித அச்சமும் இன்றி பொதுமக்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தவாரு மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனை அடுத்து ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். திமுக நிர்வாகிக்கு எதிராக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்திய சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.