காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி பகுதியில் இருந்து மாமண்டூர் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை அருகில் செல்லும் மக்லியன் கால்வாய் கரையையொட்டி டாஸ்மாக் கடை உள்ளது. 

நேற்று மதியம் மக்கிலியன் கால்வாய் கூறுக்கே செல்லும் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து அவளூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலிசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் மேலபுலம் புதிய தெருவை சேர்ந்த பரசுராமன் (வயது 57) என்பது தெரிய வந்தது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. 

இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.