Laborer dies after lorry collides with moped near Sipcot

ராணிப்பேட்டை அருகே உள்ள நரசிங்கபுரம் மலைமேடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் சிப்காட்ட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இவர் நேற்று வீட் டிலிருந்து மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். பெல் பைபாஸ் மலைமேடு ரெயில்வே பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஜினியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்து விட்டார். 

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.