குறள் : 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.


மு.வ உரை :

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன் தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

கலைஞர் உரை :

தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்

சாலமன் பாப்பையா உரை :

தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.


Kural 1006

Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru

Eedhal Iyalpilaa Thaan

Explanation :

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

Horoscope Today: Astrological prediction for January 28 2022



இன்றைய ராசிப்பலன் - 28.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


28-01-2023, தை 14, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 08.43 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ரத சப்தமி விரதம். சூரிய வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 28.01.2023 | Today rasi palan - 28.01.2023


மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவியால் கடன்கள் பைசல் ஆகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும்.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். கடன் பிரச்சினை குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001